நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம்.
70 விழுக்காடு பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதும் 2.5 விழுக்காடு அளவிற்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனித்தரையாகவும் மாறிப் போயிருக்கிறது எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில்தான், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment